Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்த பருப்பை உண்பதால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கத்தை தடுக்கிறது

இந்த பருப்பை உண்பதால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கத்தை தடுக்கிறது

Top Tamil News 1 week ago

பொதுவாக பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஊற வைத்த பாதாமில் காணப்படுகின்றன, இந்த பாதாம் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

ஆரோக்கியமான பாதாமின் தோலில் டானின்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன.
பாதாம் பருப்பை ஊறவைத்தால், தோலை எளிதில் எடுத்து விடலாம். தோலை நீக்கி உண்டால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.மேலும் பாதாமின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
2.நமது தினசரி ஆரோக்கியத்தில் நாம் பாதாம் சேர்ப்பது உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
3.மேலும் ஆரோக்கியம் தரும் பாதாம்பருப்பை சரியான முறையில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
4.பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட, ஊறவைப்பதன் மூலம் அவற்றில் இருந்து அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைத்து நம்மை நோயிடமிருந்து காக்கிறது
5.மேலும் ஆரோக்கியம் தரும் பாதாம்பருப்பு செரிமானத்தை மேம்படுத்தவும், நொதி செயல்பாட்டை தூண்டவும் உதவுகிறது.
6.மேலும் ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
7.ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பை ஊறவைக்காமல், உரிக்காமல், அப்படியே சாப்பிடுவது இரத்தத்தில் பித்தத்தின் அளவை அதிகரிக்கிறது
8.பாதாமில் அதிகளவு நார்சத்து கொண்டுள்ளது, ஊறவைத்த பாதாம் பெரிஸ்டால்டிக் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
9.ஆரோக்கியம் தரும் பாதாம்பருப்பை உண்பதால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை குறைக்கிறது.
10.ஆரோக்கியம் தரும் பாதாம்பருப்பு செரிமான பிரச்சனைகளை சீராக்குகிறது, அடிக்கடி உண்டாகும் பசி உணர்வை தடுக்கவும் செய்கிறது. மேலும் நம் உடலில் எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News