Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 10% வரி விதிப்பு!

இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 10% வரி விதிப்பு!

Top Tamil News 13 hrs ago

ந்தியா உட்பட 17 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதும் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளது அமெரிக்கா.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% தற்காலிக வரி விதிப்பை அறிவித்திருந்தது. இந்த வரி விதிப்பு காலாவதியான நிலையில், புதிய வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , "கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கும் பொருள்களின் ஏற்றுமதியைத் தடுக்க இந்தியா உட்பட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், யு.எஸ்.டி.ஆர். பரிந்துரையின்படி 10% வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று கூறினார்.

மேலும், தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைக்கொண்டு தயாரிக்கும் பொருள்களின் ஏற்றுமதியைத் தடுக்க சட்டங்களை இயற்றாத பிரிட்டன், சீனா, ஜப்பான் உட்பட்ட 43 நாடுகள் மீது 12.5% வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News