Dailyhunt
கட்சி என் பிடிக்கு வரும், ஸ்டாலினுக்கு மூளை இருக்கா? -ஆ.ராசா ஆடியோ லீக்

கட்சி என் பிடிக்கு வரும், ஸ்டாலினுக்கு மூளை இருக்கா? -ஆ.ராசா ஆடியோ லீக்

Top Tamil News 2 weeks ago

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

கட்சி என் பிடிக்கு வரும், ஸ்டாலினுக்கு ப்ரெய்ன் இருக்கா? நான் சிறையில் இருந்த போது என்னை பார்த்த அழகிரி ஸ்டாலின் பெயரை 2ஜி ஊழல் வழக்கில் சொல்லி அப்ரூவர் ஆக சொன்னார் என்பது முதல் பல தகவல்களை ஆ.ராசா கட்சிக்காரர்களுடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், ஸ்டாலினுக்கு மூளை இருக்கா? ஸ்டாலினுக்கு இங்கிலீஷ் பேசதெரியுமா? கட்சி என் பிடி! என பேசியுள்ளார்.

இதனை ட்விட்டரில் விமர்சித்துள்ள அதிமுக, "திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் எப்படிபட்ட தலைவர் என்பதை ஆ ராசாவே போட்டு உடைந்துவிட்டார். போலி விளம்பரங்களை விலக்கி பார்த்தால் ஸ்டாலின் வெறும் மண்குதிரை தான் என்று நாங்கள் சொன்ன கூற்றை இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளரே வழிமொழிந்து விட்டார்.

2 ஜி கருணாநிதியிடம் இருந்து என்ன பணம் சென்றது? அழகிரி சிறைக்கு வந்து, ஸ்டாலின் பெயரைக் கூறி அப்ரூவர் ஆகச் சொன்னார் என்றால், 1,76,000 கோடி ரூபாய் ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு?நாங்கள் ஏற்கனவே சந்தேகித்தது போல், இந்த சிதம்பர ரகசியங்களை கூறி தான் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதா?

ஆ ராசாவின் பேச்சு பற்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா?

#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்

(பி.கு. : நாங்களாவது பொம்மை முதல்வர் என்று Decent ஆக தான் சொன்னோம். உங்க கட்சி துணைப் பொதுச்செயலாளர் உங்களுக்கு Brain இருக்கா? என்று கேட்டிருக்கிறார். அந்தோ பரிதாபம்
@mkstalin
அவர்களே!)" எனக் குறிப்பிட்டுள்ளது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News