Dailyhunt
"கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்" - புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்!

"கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்" - புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்!

Top Tamil News 4 years ago

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “கமல்கோவை தெற்கு தொகுதியில் தோல்வியுற்றது தமிழ் மக்களுக்கு கவலையை தந்துள்ளது. பணம் கொடுக்காமல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றவர் கமல்ஹாசன்.

நல்ல விஷயத்தை செய்பவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் நல்லது. கமலும் சீமானும் கூட்டணி வைத்தால் அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கலாம். வரக்கூடிய காலத்தில் யார் மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களோ அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். கொரோனா காலமென்பதால் இட ஒதுக்கீட்டு செயல்பாடுகளை தற்போது வரை நிறுத்தி வைத்துள்ளோம்.

மேலும் இடஒதுக்கீடு குறித்து இந்த திமுக அரசிடம் வலியுறுத்துவோம். சாதி பற்றும் பிற சாதி நட்பும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். முதலில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரட்டும் அதற்கு பின்னர் அவர் குறித்து பேசலாம்” என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News