Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை- பணி ஆணையை நேரில் வழங்கும் விஜய்

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை- பணி ஆணையை நேரில் வழங்கும் விஜய்

Top Tamil News 1 week ago

ரூர் துயரச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான ஆணை தரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்டம்பரில் நடந்த, தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். அவர்கள் குடும்பத்திற்கு, த.வெ.க., சார்பில், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து த.வெ.க., தலைவர் என்ற முறையில், விஜய் ஆறுதல் கூறினார். தேர்தலுக்கு பின் நேரில் வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக, விஜய் உறுதியளித்திருந்தார். தற்போது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க., ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், முதல்வர் விஜய் அங்கு செல்லவில்லை என்பதை, எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன.

இந்நிலையில் வரும் ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News