Monday, 11 Jan, 7.26 pm Top Tamil News

அரசியல்
"கூட்டணி குறித்து பேசவில்லை, இட ஒதுக்கீடு குறித்து மட்டுமே பேசினேன் " - டாக்டர் ராமதாஸ்

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் வன்னிய சாதிக்கு மட்டுமே தனியாக 20 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக டிசம்பர் மாதத்தில் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் பாமகவினர். அந்தப் போராட்டத்திற்காக சென்னையை நோக்கி வந்த பாமகவினர் வழியேலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அச்சமூகத்தை சேர்ந்த சிலர் ரயிலில் அவர்கள் கல் விட்டெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்தது

1. தமிழக அமைச்சர்கள் திரு. பி.தங்கமணி, திரு.எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.#vanniyarreservation

— Dr S RAMADOSS (@drramadoss)

இந்நிலையில், விழுப்புரம் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், "தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது.!!! அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை.! வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News
Top