Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3.5 லட்சம்! எங்கு தெரியுமா?

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3.5 லட்சம்! எங்கு தெரியுமா?

Top Tamil News 3 days ago

ன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்வோருக்கான பரிசுத்தொகையை இரண்டரை லட்ச ரூபாயிலிருந்து மூன்றரை லட்சமாக உயர்த்தியது ஹாங்காங் அரசு.

ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, விரிவாக்கப்பட்ட பண ஊக்கத்தொகைத் திட்டம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உள்ள பெற்றோருக்கான மானிய விலையிலான வீடுகளுக்குக் குறைக்கப்பட்ட முன்பணம் உள்ளிட்ட 11 புதிய முன்னெடுப்புகளை ஹாங்காங் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இரண்டாவது மற்றும் அதற்கு அடுத்த குழந்தைகளை பெற்றுக்கொள்வோருக்கான பரிசுத்தொகையை இரண்டரை லட்ச ரூபாயிலிருந்து மூன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், ரூ.17 லட்சம் பெருமான வருமானத்துக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட வரிச்சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு விநியோகத் திட்டத்தின்படி, வாடகை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

2024-ல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 35,723 ஆக உயர்ந்தபோதிலும், அடுத்த ஆண்டில் அது 31,000-க்கும் சற்று குறைந்தது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 19,255 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News