Dailyhunt
மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் - எல்.முருகன்..!

மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் - எல்.முருகன்..!

Top Tamil News 1 week ago

விநாசி தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாஜ சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் முருகன் தோல்வியடைந்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள், மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில், அவிநாசி சட்டசபை தொகுதியில் நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓய்வின்றி பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் களத்தில் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் மற்றும் வெற்றி பெற்ற அக்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News