Dailyhunt
மல்லிகார்ஜுன கார்கே 'விஷ பாம்பு' குறித்த சர்ச்சை பேச்சு- தேர்தல் ஆணையத்தில் புகார்

மல்லிகார்ஜுன கார்கே 'விஷ பாம்பு' குறித்த சர்ச்சை பேச்சு- தேர்தல் ஆணையத்தில் புகார்

Top Tamil News 1 week ago

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று (ஏப்ரல் 8, 2026) புகார் அளித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் நிலாம்பஜாரில் (Nilambazar) நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீங்கள் நமாஸ் (தொழுகை) செய்து கொண்டிருக்கும்போது ஒரு விஷப் பாம்பு வந்தால், தொழுகையை நிறுத்திவிட்டு அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகள் அந்த விஷப் பாம்புகளைப் போன்றவர்கள். நீங்கள் அவர்களைக் கொல்லாவிட்டால், உங்களால் உயிர்வாழ முடியாது அவர் பேசியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது ஆர்எஸ்எஸ் திஸ்பூர் & சில்சார் காவல் நிலையங்களில் 2 தனித்தனியாக FIR ஐ பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அவரது வெறுப்பு பேச்சுக்காக பாஜக பசிஸ்தா ஒரு FIRஐ பதிவு செய்திருந்தது குறிப்பிடதக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News