Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி..!!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி..!!

Top Tamil News 3 weeks ago

ந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பாரிஸ் ஒலிம்பிக் (2024) பைனலுக்கு முன்னேறிய இவர், கூடுதல் எடை காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பின் ஓய்வு பெற்றார்.

தனது முடிவை திரும்பப் பெற்ற இவர், வரும் ஆசிய விளையாட்டில் (செப். 19-அக். 4) பங்கேற்கும் வகையில், உ.பி.,யின் கோண்டா நகரில் நடந்த சீனியர் ரேங்கிங் தொடரில், களமிறங்க இருந்தார்.

ஆனால், 'விதிகளை சரியாக பின்பற்றவில்லை,' என தெரிவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,), வினேஷ் போகத்திற்கு தடை விதித்தது. இதை எதிர்த்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முடிவில், வினேஷ் போகத் பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இருப்பினும், டபிள்யு.எப்.ஐ., சார்பில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 'தேசத்திற்கு பெருமை சேர்த்தவர் வினேஷ் போகத். இவர் தகுதிச்சுற்றில் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்நிலையில் இன்று (மே 30) கோண்டா நகரில் துவங்கும் இரண்டாவது கட்ட தகுதிச்சுற்றில் வினேஷ் போகத், 57 கிலோ பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்றில் ஜோதியை 7-1 என எளிதாக வீழ்த்தினார்.

காலிறுதியில் நிஷு உடன் மோதினார். இதில் நிஷு கடும் சவாலுக்கு பிறகு 7-6 என வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.அரையிறுதியில் மீனாட்சியை எதிர்கொண்டார். இதில் 4-6 என வினேஷ் போகத் தோல்வியடைந்தார்.

இதனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News