Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மானிய விலை சிலிண்டர் முன்பதிவு - ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்..!

மானிய விலை சிலிண்டர் முன்பதிவு - ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்..!

Top Tamil News 15 hrs ago

மானிய விலை சிலிண்டர் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வரும் அக்., 1ஆம் தேதி முதல் ஆதார் சரிபார்ப்பு செய்த பிறகே மானிய விலை சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். போலி இணைப்புகளை நீக்கும் நடவடிக்கையின் பாகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் சரிபார்ப்பை முடிக்காதவர்கள் சிலிண்டர் நிறுவன செயலி அல்லது வினியோகஸ்தர்களை அணுகலாம். தகுதியுள்ள எந்த நுகர்வோருக்கும் மானிய விலை சிலிண்டரை தடுப்பது நோக்கம் அல்ல என கூறப்பட்டுள்ளது.

ற்கனவே, 27.43 கோடி வாடிக்கையாளர்கள் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துள்ளனர். அவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை. மற்ற வாடிக்கையாளர்கள் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, வினியோகஸ்தர் அலுவலகத்தில் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News