Dailyhunt
மரக்காணத்தில் பரபரப்பு..! விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்..!

மரக்காணத்தில் பரபரப்பு..! விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்..!

Top Tamil News 2 weeks ago

வெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை முன்வைத்து நான்கு இடங்களில் மட்டும், ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணி நேரம் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு மணி நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்

ஈ.சி.ஆர். சாலையில் புதுச்சேரி நோக்கி செல்லும் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை மறித்து கார் மீது ஏறி அட்டகாசம் செய்த அக்கட்சி தொண்டர்கள் .விஜய்யோடு வந்த பவுன்சர்கள் அவர்களை கார் மீதிருந்து கீழிறக்கி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News