Dailyhunt
மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!!

மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!!

Top Tamil News 3 days ago
ரிய உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் மதிப்பானது, உலக சந்தையில் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
முதலீடு என்றாலே பங்குச்சந்தை தான் என்ற நிலையானது கடந்த 2 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது.

ஏனெனில் பங்குச்சந்தைகள் அடி வாங்கும்போது முதலீட்டாளர்கள் உடனடியாக தங்கத்தின் மீது முதலீடுகளை திருப்பி விடுகின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு விறுவிறுவென உயர்ந்துகொண்டே போகிறது. உலகளாவிய பண வீக்கம் மற்றும் டாலர் மதிப்பின் நிச்சயமற்ற தன்மை காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதுவே தங்கம் விலை ஏறுவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

அந்த வகையில் சென்னையில் நேற்று (மே 06) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,100க்கும், ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,150க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News