Dailyhunt

நடிகர் ஜீவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய த.வெ.க தலைவர் விஜய்.!

Top Tamil News 1 week ago

பிரபல மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கியபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது பூத உடல் விமான மூலமாக நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் முக்கிய பிரமுகர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழ் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் ஆரம்ப கால திரை வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படங்களான பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், ஜில்லா போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி.

அதன் அடிப்படையில் தமிழக முதல்வராக கூடிய இந்த பரபரப்பான சூழலிலும் தன்னுடைய திரைப்படத் தயாரிப்பாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மாலை 6:30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ஆர் பி சவுத்ரி இல்லத்திற்கு சென்று அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆர் பி சௌத்ரியின் இரண்டாவது மகனான ஜீவாவை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.

‎ஆர் பி சவுத்ரியின் இறுதி சடங்கு இன்று காலை 10:30 மணிக்கு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News