Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நகம் கடிப்பதால் நம் உடலுக்கு உண்டாகும் தீமைகள்

நகம் கடிப்பதால் நம் உடலுக்கு உண்டாகும் தீமைகள்

பொதுவாக பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று நகம் கடிக்கும் பழக்கம் .இந்த நகம் கடிக்கும் பழக்கத்தால் நம் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகிறது .அதனால் இந்த பழக்கத்தை விட வேண்டும் . என்னால் நகங்களைக் கடிக்காமல் இருக்க முடியாது என நீங்கள் நினைத்தால் முடிந்தவரை தனிமையில் இருக்கும்பொழுது கைக்கு கையுறை போடுங்கள்.

நகத்திற்கு அழகான நெயில் பாலிஷ் போடுவதன் மூலமாகவும் நகம் கடிப்பது குறையும்.மேலும் இதன் மூலம் நமக்கு உண்டாகும் கேடுகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

1.நீங்கள் உங்கள் வாயில் வைத்து நகங்களை கடிக்கும் போதெல்லாம் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் உங்களுடைய உடலில் சென்று நோய்களை உண்டாகும்
2.தொடர்ந்து நகத்தை கடித்து கொண்டிருப்பதால் உங்கள் நகங்களை சுற்றி இருக்கக்கூடிய தோல் காயமாகி விடும் . .
3.மேலும் நகம் கடிக்கும் பழக்கத்தால் நகத்தை சுற்றி வலி, வீக்கம், நகம் சிவந்துபோதல் இப்படிப்பட்ட பிரச்சினைகளும் பாக்டீரியா தொற்றுக்களையும் ஏற்படுத்தும்.
4.இந்த நகம் கடிக்கும் பழக்கத்தால் உங்கள் நகங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நீங்கள் நகத்தை வாயில் வைப்பதால் வாய்வழி அது உடலுக்குள் செல்கிறது.
5.நகம் கடிக்கும் பழக்கத்தால் பல்வேறு தொற்று நோய்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.
6.தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்துர்நாற்றம் ஏற்படும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
7.சிலருக்கு நகம் கடிப்பது மிக தீவிரமான உளவியல் சம்பந்தப்பட்ட உணர்ச்சி பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
8.நீங்கள் பலமுறை நகம் கடிப்பதில் இருந்து வெளியே வர முயற்சித்தும் உங்களால் முடியாமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News