Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நாங்கள் வசூல் செய்ததாக கூறும் நிர்மல்குமார் அதை நிருபிக்க முடியுமா?"- கீதா ஜீவன் சவால்

"நாங்கள் வசூல் செய்ததாக கூறும் நிர்மல்குமார் அதை நிருபிக்க முடியுமா?"- கீதா ஜீவன் சவால்

Top Tamil News 1 week ago

தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் குமார் பேசியுள்ளார்.அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை.

வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிருபிக்க முடியுமா? முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் தனது எக்ஸ் தளத்தில், "தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார் அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பற்றியும் ,என் தந்தையார் பெரியசாமி அவர்களை பற்றியும் என்னைப் பற்றியும்,முன்னாள்‌ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்‌ பற்றியும் அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மழை வெள்ள நேரத்தில் தூத்துக்குடியில் யாருமே களத்துக்கு வரவில்லை என வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார். எம்எல்ஏ என்கிற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். அன்றைய துணை முதல்வர், தொகுதியின் எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினர். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி பார்க்காமல் புறமுதுகை காட்டி ஓடிய நீங்கள் இதை பேசலாமா?

தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும்,நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் குமார் பேசியுள்ளார்.அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை. வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிருபிக்க முடியுமா? முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். வாய் இருக்கிறது… அதிகாரம் இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிடுங்கள்... பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல் குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News