Dailyhunt
"நான்கு பக்கமும் எதிரிகள்... நடுவில் நாம் தமிழர் கட்சி"- சீமான்

"நான்கு பக்கமும் எதிரிகள்... நடுவில் நாம் தமிழர் கட்சி"- சீமான்

Top Tamil News 2 weeks ago

பெரம்பலூர் வேட்பாளர் சுகன்யா மற்றும் குன்னம் வேட்பாளர் கீர்த்திவாசன் ஆகியோரை ஆதரித்து பெரம்பலூரில் பரப்புரை மேற்கொண்டார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது பேசிய சீமான், "நான்கு பக்கமும் எதிரிகள் இருக்கிறார்கள். நடுவில் நாம் தமிழர் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் பெயரையும் படித்துப்பாருங்கள். எழுத்து தமிழாக இருக்கும், ஆனால் உச்சரிப்பு ஆங்கிலமாக இருக்கும்.

எழுத்து ஆங்கிலமாக இருக்கும், ஆனால் உச்சரிப்பு தமிழாக இருக்கும். இதுதான் திராவிடர்கள் நீண்டகாலமாக பின்பற்றிவந்த இருமொழிக் கொள்கை. இப்படியாக நம் முன்னோர்கள் அள்ளிப்பருகிய தமிழ் அழிந்துபோனது. எல்லா மொழியும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் மொழிதான் இறைவனால் பேசப்பட்டது. சில மொழிகள் பிறந்து சிறக்கும், ஆனால் தமிழ் மொழி சிறந்தே பிறந்தது; அது இயற்கையின் மொழி, இறைவனின் மொழி" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News