Dailyhunt
நெல்லையில் விஜய் ரோடு ஷோவில் தள்ளுமுள்ளு- பரபரப்பு வீடியோ

நெல்லையில் விஜய் ரோடு ஷோவில் தள்ளுமுள்ளு- பரபரப்பு வீடியோ

Top Tamil News 3 weeks ago

நெல்லையில் பிரச்சாரத்திற்காக வந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் போடப்பட்டிருந்த மேடை அருகே வாகனம் திரும்பிய போது அவர்களின் ரசிகர்கள் கூட்டம் காவல் துறையின் தடுப்புகளை மீறி வாகனத்திற்கு பின் ஓடினர் காவல் துறையினர் சாலையில் தடுப்பு வைத்து மறித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தனி விமானம் மூலம் வருகை தந்திருந்தார். சரியாக மதியம் 1 மணிக்கு நடிகர் விஜய் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு வருகை தந்தார். அந்த நேரத்தில் விஜயை பார்ப்பதற்காக குவிந்திருந்த தொண்டர்கள் ரசிகர்கள் அனைவருக்குமே காலையிலிருந்து பொதுக்கூட்ட அரங்கிலேயே காத்திருப்பதால் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனைத்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை குடித்துவிட்டு தாகத்தை தனித்தனர். நிகழ்ச்சி முடிந்து விஜய் கேடிசி நகர் பகுதியில் இருந்து தனது தனி கேரவன் மூலமாக தாழையுத்திற்கு புறப்பட்டார். அந்த நேரத்தில் தொண்டர்களும் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்று இருந்த ரசிகர்களும் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். ஆனால் பொதுக்கூட்டம் நடந்த இடங்கள் முழுவதுமே நிர்வாகிகள் தொண்டர்கள் ரசிகர்கள் அனைவரும் குடித்து கீழே போடப்பட்டிருந்த காலி தண்ணீர் பாட்டில்கள் அங்கும் இங்குமாக பார்க்கும் இடங்களில் எல்லாம் சிதறி கிடந்தன. ஏற்கனவே தமிழக கட்சி கழகத்தில் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போது நிகழ்ச்சி நடத்தினால் அந்த இடத்தையும் முறையாக சுத்தம் செய்து பராமரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதேசமயம் நெல்லையில் பிரச்சாரத்திற்காக வந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் போடப்பட்டிருந்த மேடை அருகே வாகனம் திரும்பிய போது அவர்களின் ரசிகர்கள் கூட்டம் காவல் துறையின் தடுப்புகளை மீறி வாகனத்திற்கு பின் ஓடினர் காவல் துறையினர் சாலையில் தடுப்பு வைத்து மறித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் மாட்டிக் கொண்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News