Dailyhunt
ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி..!!

ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி..!!

Top Tamil News 0 months ago

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் மேல் தலையூற்று அருவி உள்ளது.

பரப்பலாறு அணை நீர் வெளியேறி தலையூற்று அருவியாக மாறி இங்கு தண்ணீர் கொட்டுகிறது.

அருவியை யொட்டி சுழல், புதைகுழி உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதனால் அருவியில் குளிக்க தடை உள்ளது. கோடையிலும் தண்ணீர் வருவதால் தடையை மீறி பலர் குளிக்க செல்கின்றனர்.

அருவி அடிவாரத்தில் பெருமாள் , நல்காசிவிஸ்வநாதர் கோயில்கள் உள்ளன. கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு அருவிக்கு சென்று குளிக்கின்றனர். கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த 11 பேர் நேற்று மாலை அருவிக்கு சென்றனர்.

அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது ஆடில் 19, சதாம் உசேன் 18, ஆயாஸ் 19, பயாஸ் 19, ஆகியோர் நீரில் மூழ்கினர். உடனிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. ஒட்டன்சத்திரம் தீயணைப்புக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பலியானோரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News