Dailyhunt
ரோடு ஷோவில் பெண்களும், இளைஞர்களுமே அதிகம் பங்கேற்பு- மோடி பூரிப்பு

ரோடு ஷோவில் பெண்களும், இளைஞர்களுமே அதிகம் பங்கேற்பு- மோடி பூரிப்பு

Top Tamil News 2 weeks ago

புதுச்சேரியில் ரோடு ஷோவில் பங்கேற்ற நிலையில் சென்னை திரும்பினார் பிரதமர் மோடி.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.

இதில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமசிவாயம், மாநில பிஜேபி தலைவர் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சாலைப் பேரணி மிகச்சிறப்பாக அமைந்தது. புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர், இதன்மூலம் BEST புதுச்சேரியை உருவாக்கும் எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சாலைப் பேரணியில் பெண்களும், இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News