Dailyhunt
சசிகலாவின் தேர்தல் வியூகம்..! 64 தொகுதிகளில் சசிகலா கட்சி போட்டி..!

சசிகலாவின் தேர்தல் வியூகம்..! 64 தொகுதிகளில் சசிகலா கட்சி போட்டி..!

Top Tamil News 0 months ago

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில், அக்கட்சியை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த சசிகலா, தமிழகம் திரும்பியதும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் என்ற கட்​சி​யை அவர் தொடங்​கி​யுள்ளார். மேலும், பாமக நிறு​வனர் ராம​தாசுடன் கூட்​டணி அமைத்துப் போட்​டி​யிடு​வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைப் போலவே, பாமகவிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் அன்புமணி.

இந்நிலையில், சசிகலா, ராமதாஸ் கூட்டணியால் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அதிமுகவுக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளைப் பிரிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, முதற்கட்டமாக 21 வேட்பாளர்களை அண்மையில் அறிவித்தார் சசிகலா.

இரண்டாம் கட்டமாக, அடுத்து 38 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், புதன்கிழமை (ஏப்ரல் 1) அவர் வெளியிட்ட பட்டியலில் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஆக மொத்​தத்​தில், சசிகலா கட்சி இதுவரை 64 தொகு​தி​களில் வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது. சசிகலா தரப்​பில் கூட்​டணிக் கட்​சிகளுக்கு 13 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

இந்தக் கூட்​ட​ணி​யில் உள்ள பாமக சார்​பில் இது​வரை 25 தொகு​தி​களுக்கு வேட்​பாளர்கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News