Top Tamil News
Top Tamil News

சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறை அனுமதி!

சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறை அனுமதி!
  • 542d
  • 82 shares

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி, மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நேற்று குறைந்த அளவிலான பக்தர்கள் வந்த நிலையில், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

No Internet connection

Link Copied