Dailyhunt
சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்! - எழும்பூர் ரயில் நிலையத்தின் அந்த 45 நாள் தடையை நீக்கிய ரயில்வே..!

சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்! - எழும்பூர் ரயில் நிலையத்தின் அந்த 45 நாள் தடையை நீக்கிய ரயில்வே..!

Top Tamil News 2 weeks ago

ழும்பூரில் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த பிப்ரபரி மாதம் முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10,11ல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக 5,6வது வழித்டத்தில் கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், கிட்டதட்ட 44 ரயில்கள் வரை ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால், ரயில் நிலையத்தில் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில்,ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிகள் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளன.

இதையடுத்து இன்று முதல் எழும்பூரில் புறநகர் ரயில் சேவை தொடங்கும். நிறுத்தப்பட்ட 44 புறநகர் ரயில்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதன்மூலம் எழும்பூரில் 10, 11வது பிளாட்பார்ம்களில் வழக்கமான நேரங்களில் ரயில்கள் இயக்கப்படும்.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் சேவைகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 5, 2026-க்கு பதிலாக, ஏப்ரல் 3, 2026 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது நடைமேடை எண் 10 மற்றும் 11-ல் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டதால், இந்தச் சேவை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில், நடைமேடை எண் 10 மற்றும் 11-ல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக பிப்ரவரி 20, 2026 முதல் ஏப்ரல் 5, 2026 வரை ரயில் போக்குவரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பணிகளும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே வெற்றிகரமாக முடிக்கப்பட்டதால், இந்தத் தடை முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டு, புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதன்படி, பிப்ரவரி 27, 2026 முதல் அமலில் இருந்த தற்காலிக புறநகர் ரயில் கால அட்டவணை ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 20, 2026-க்கு முன்பு நடைமுறையில் இருந்த வழக்கமான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வருகிறது.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - அரக்கோணம் வழித்தடத்தில் அனைத்து மின்சார ரயில் (EMU/MEMU) சேவைகளும், அதன் நிறுத்தங்கள் மற்றும் இயக்க முறைகளும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன. இது தினசரி பயணிகளுக்கு மீண்டும் தடையற்ற மற்றும் திறமையான ரயில் சேவையை உறுதி செய்கிறது.பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் அதே வேளையில், ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சென்னை கோட்டத்தின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியின் பலனாக இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தடை காலத்தின் போது பயணிகள் காட்டிய பொறுமைக்கும், புரிதலுக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஏப்ரல் 3, 2026 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 00:00 மணி முதல் பயணிகள் வழக்கமான கால அட்டவணையைப் பின்பற்றிப் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை கடற்கரை-தாம்பரம்/செங்கல்பட்டு வழித்தடத்திற்கான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான வழக்கமான கால அட்டவணையுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News