Dailyhunt
சின்ன தகராறில்... உயிரே போன சோகம்! தந்தையை கொன்ற மகன் கைது

சின்ன தகராறில்... உயிரே போன சோகம்! தந்தையை கொன்ற மகன் கைது

Top Tamil News 2 weeks ago

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே திருமண ஆண்டு விழாவின் போது ஏற்பட்ட தகராறில் நாற்காலியால் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அம்பூரி பகுதியைச் சேர்ந்த தோமஸ் ஆபிகாம். இவரது மகன் ஷானு தோமஸ். ஷானு தோமஸின் 2-வது திருமண ஆண்டு விழா நேற்று அவரது வீட்டில் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவின் இறுதியில், ஷானு தோமஸ் மற்றும் குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த ஷானுவை சமாதானப்படுத்த, அருகில் வசிக்கும் சகோதரர் பினு வர்கீஸை, தோமஸ் ஆபிரகாமின் மனைவி அழைத்து வந்தார். அப்போது ஷானுவுடன் பேச முயன்றபோது, கோபத்தில் இருந்த ஷானு கையில் இருந்த கத்தியால் பினுவை குத்தியதாத கூறப்படுகிறது.

உடனே உறவினர்கள் ஷானுவை தடுக்க முயன்றனர். இதனிடையே வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்த ஷானு, தனது தந்தையை அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறிய தந்தை சுவரில் மோதிக் கீழே விழுந்த நிலையில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஷானு தோமசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுர்வேத தெரபிஸ்டாக பணியாற்றி வந்த ஷானு தோமஸ், கோயம்புத்தூரில் வேலை செய்து வந்தார். மலேசியாவில் வேலைக்கு செல்லும் நோக்கில் கடந்த வரம் ஊருக்கு வந்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News