Dailyhunt
சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் பறிமுதல்- கு.ப.கிருஷ்ணன்

சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் பறிமுதல்- கு.ப.கிருஷ்ணன்

Top Tamil News 1 week ago

வீடுகளுக்குள் சென்று பணத்தை பறிமுதல் செய்வதற்கு சட்டத்தில் இடமுள்ளதா? த.வெ.க லால்குடி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளரும் லால்குடி தொகுதி வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் திருச்சிக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார். அவர் ஆன்லைனில் அவர் பிரச்சாரம் செய்தாலும் எந்த தவறும் இல்லை. விஜய் வரும் பொழுது நாங்கள் கூட்டத்தை திரட்டவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக கூடுகிறார்கள். இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்டோர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பொழுது கேள்வி கேட்காதவர்கள் விஜய் போட்டியிடும் போது மட்டும் கேள்வி கேட்பது ஏன் ?

விஜய்யின் வேட்பு மனுக்களில் எந்த குளறுபடியும் இல்லை. மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது, வீட்டுக்கு மூன்று முதல் நான்கு பேர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். மக்களிடம் நல்ல எழுச்சி உள்ளது, அமோக வெற்றி கிடைப்பது உறுதி. வாகனங்களில் அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்லும் பொழுது தேர்தல் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்வது தவறு கிடையாது. ஆனால் வீடுகளுக்குள் சென்று மக்கள் தங்கள் தேவைகளுக்காக வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்வதில் சட்டத்தில் இடம் உள்ளதா ? சோதனைக்கு வந்தால் உரிய சம்மன் அனுப்பிவிட்டு தான் வர வேண்டும். லால்குடி முழுவதும் என்னுடைய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். என்னுடைய உறவினர் ஒருவருடைய வீட்டில் சோதனை செய்ததில் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News