Dailyhunt
தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் தமிழ்நாட்டை காப்போம் - மாணிக்கம் தாகூர்..!

தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் தமிழ்நாட்டை காப்போம் - மாணிக்கம் தாகூர்..!

Top Tamil News 2 weeks ago

ட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக நேற்றைய தினம் வேட்பாளர்கள் குறித்தான பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஏற்கனவே வெற்றி பெற்ற மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும், இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாமக கவுரவ தலைவர் ஜிகே மணியின் மகன் தமிழ்குமரன் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நிலையில், அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து கட்சிக்குள் இருந்தே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே எம்பி ஜோதிமணி இது சம்பந்தமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் மற்றொரு எம்பியான மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் Mallikarjun Kharge அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi அவர்களின் முன்னிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடினமாக உழைத்த பல காங்கிரஸ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, நமக்கு வெறும் 28 இடங்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவிக்கப்பட்ட 27 வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த 27 இடங்களிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக Fort St. George கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம் இது. இந்நேரத்தில் நாம் நம் உட்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர் அண்ணன் M. K. Stalin அவர்களுடைய தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும்.

Amit Shah அதிமுகவை 2019,2021, 2024 என்று மூன்று முறை போல இந்த முறை மீண்டும் தோற்கடிக்க வேண்டும்.

வாங்க மத்த பிரச்சனைகளை அடுத்து மாதம் வரை தள்ளி வைப்போம்.

கடமைக்கு கட்டுப்பட்ட ஒழுக்கமான படைவீரர்களாக, நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும்.
நேருவின் அண்ணாவின் வாரிசுகள் நாம் வீழ்ந்தால் கோட்சேவின் வாரிசுகள் வெற்றி பெறுவார்கள் .

200 இடங்களை வெல்லும் இலக்குடன் ஒற்றுமையாக செயல்படுவோம்.
மீண்டும் வெற்றி பெறுவோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News