Dailyhunt
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு..!!

Top Tamil News 1 week ago
ரான், இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலை தினசரி ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் ஜெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது.
அதன் பின்னர் படிப்படியாக குறைந்துரூ.13 ஆயிரத்தை தொட்டது.

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் அதிகரித்ததும் தங்கம் விலை குறைவதற்கு காரணமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரிய அளவு விலை அதிகரிக்காததால் நகைப் பிரியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் தங்கம் விலை நேற்று (ஏப்., 06) ஒரு சவரன் ரூ.111,920-க்கும், ஒரு கிராம் ரூ.13,990-க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஏப்., 07) ஒரு கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,860-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.110,880-க்கும் விற்கப்படுகிறது.

அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News