Dailyhunt
தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை - தவெக என்ன செய்யும்..?

தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை - தவெக என்ன செய்யும்..?

Top Tamil News 5 days ago

மிழக சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 என்ற "மேஜிக் எண்" தேவைப்படும் நிலையில், த.வெ.க. தற்போது சுமார் 108 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இதனால், மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது. இந்த சூழலில், எந்தக் கட்சிகளிடம் த.வெ.க. ஆதரவை கோரப்போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்குமா, அல்லது நேரடியாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது கவனிக்கப்படுகிறது.

இதற்கிடையே, த.வெ.க. வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சி த.வெ.க.க்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்கள், தேமுதிக 1, விசிக 2, மதிமுக 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் தனியாக 55 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 1, பாமக 5, அமமுக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த கட்சிகளில் சில ஆதரவு அளித்தாலே, த.வெ.க.க்கு தேவையான பெரும்பான்மையை எட்ட முடியும்.

இதற்கான பேச்சுவார்த்தைகளில் த.வெ.க. மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News