Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தவெக ஆட்சி மக்கள் தயவில்தான் நடக்கிறது" - அமைச்சர் ராஜ்மோகன்

"தவெக ஆட்சி மக்கள் தயவில்தான் நடக்கிறது" - அமைச்சர் ராஜ்மோகன்

Top Tamil News 3 hrs ago

பெண்கள் மற்றும் மக்களின் தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.வேறு யாருடைய தயவிலும் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "முதல்வருக்கு திமுகவினர் செய்தது நியாயமா? அவர் பேசுபோது கத்தியது, கூக்குரலிட்டது, தரையில் அமர்ந்து தர்ணா பண்ணது இதெல்லாம் தன் அவர்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு செய்த கொடுமை. தவெக ஆட்சி மக்கள் தயவில்தான் நடக்கிறது. பெண்கள், வாக்காளர்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட திமுக ஆட்சி அமைத்தது. யார் தயவு? யாருடைய தயவும் தேவை இல்லை.

திமுக கூட்டணிக் கட்சியினரிடம் தி முக பண்ணையார் மனப்பான்மையுடன்தான் இருந்தது. 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்பதை முதலமைச்சர் சொன்னார். அதை செய்துள்ளனர். மக்களின் தயவுதான் ஆட்சி நடக்கிறது.

நாங்கள் யார் தயவிலும் ஆட்சி நடத்தவில்லை. மேலும், இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும். கடல் காற்று வாங்க தலைமை செயலகம் கட்டவில்லை, மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமையும். பட்டிமன்றப் பேச்சாளர் நானே சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்துவிட்டேன். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டிமன்றப் பேச்சாளர் போல் எதுகை மோனையாகப் பேசி வருகிறார்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News