Dailyhunt
தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் கொண்டாட்டம்..!

தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் கொண்டாட்டம்..!

Top Tamil News 5 days ago

டிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, தவெக 112 இடங்களிலும், அதிமுக 65 இடங்களிலும், திமுக 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பத்தினருடன் தவெக வெற்றியைக் கொண்டாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், விஜய் குடும்பத்தினர் அவரது தந்தையை கட்டிப்பிடித்து கொண்டாடி வருகின்றனர். குடும்பமாக ஷோபாவில் அமர்ந்து கொண்டு தவெக சின்னமான விசிலை ஊதி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். தமிழக தேர்தல் வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News