Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை..!

தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை..!

Top Tamil News 3 weeks ago

சென்னையின் தியாகராயநகர் தொகுதி 1957இல் உருவாக்கப்பட்டது. இங்கு இதுவரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 4, த.மா.கா.

1 முறை வெற்றி பெற்றுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் திமுக சார்பில் ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் மகன் ஆவார்.அதிமுக சார்பில் சத்தியநாராயணன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் அனுஷா களம் காண்கிறார்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலாகவே தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இருந்து வருகிறார். 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

தவெகவின் புஸ்ஸி ஆனந்த் கணிசமான வாக்குகளை பிரித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தி.நகரை பொறுத்தவரை களம் சற்று கடினமானதாகவே உள்ளது. தி.நகர் தொகுதியை கைப்பற்றுவது யார் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News