Dailyhunt
தவெகவுக்கு அதிமுக ஆதரவு இல்லை- கே.பி.முனுசாமி

தவெகவுக்கு அதிமுக ஆதரவு இல்லை- கே.பி.முனுசாமி

Top Tamil News 1 week ago

வெகவுக்கு அதிமுக ஆதரவு என்ற செய்தி தவறானது என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைக்க முடியவில்லை.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்துள்ளது. த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுகவில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது. எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் விஜய்க்கு ஆதரவுக்குரல் எழுப்பினர்.

இந்நிலையில் சென்னையில் இபிஎஸ் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, "தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்ற செய்தி தவறானது. அதிமுக மிகப்பெரிய இயக்கம். ஆகவே எந்த சூழலில் தவெகவுக்கு ஆதரவு கிடையாது. தவெக ஆதரவு குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசவில்லை." என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News