Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி எந்த நோயை தடுக்கும் தெரியுமா ?

தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி எந்த நோயை தடுக்கும் தெரியுமா ?

Top Tamil News 1 week ago

பொதுவாக நாம் தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக நமக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். மேலும் சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண ஆரோக்கியம் பிறக்கும் .

இந்த தேங்காய் உண்பதால் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.மேலும் தேங்காய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

1.பொதுவாக தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடலாம் .இப்படி சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலப்பதால் , தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.
2.தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் உடையது
3.மேலும் தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது, அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைத்து நம் ஆரோக்கியம் காக்கிறது
4.மேலும் காக்காய் வலிப்பு உள்ளவர்கள் அதன் வலிப்பு தன்மையைக் குறைப்பதற்கு தேங்காய் பயன்படும் .
5.பொதுவாக ஒரு தேங்காயில் கிட்டத்தட்ட 61 சதவீதம் வரை நார் சத்து இருக்கிறது.
6.மேலும் இந்த நார் சத்தானது செரிமானத்திற்கு தேவையான என்சைமனை அதிகரித்து உங்கள் உணவுகள் எளிதில் செரிமானம் செய்ய வைக்கிறது
7.இன்று இள வயதினருக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது இளமையில் நரைப்பது, முடி உதிர்வது, முடியின் அடர்த்தி குறைவது போன்ற பிரச்சினைதான்
8.இப்படி இளவயதில் முடி உதிர்ந்தால் அவர்களின் மனநிலையை தவிர்த்து உடல் நிலை சோர்வடையும்.
9. இதனை போக்க தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி உங்கள் கூந்தலின் அழகை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது .

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News