Dailyhunt
தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் திட்டமுள்ளதா..? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்..!

தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் திட்டமுள்ளதா..? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்..!

Top Tamil News 2 weeks ago

டிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக ஹைதரபாத் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று (ஏப்.4) வந்திருந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசினார். ஜெய்லர் 2' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனம் தான் அறிக்கும் என்றும் கூறினார்.

"தேர்தல் நெருங்குகிறது, மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, ரஜினிகாந்த் எந்த வார்த்தையும் பேசாமல், கை எடுத்து கும்பிட்டபடி அமைதியாக ரியாக்ஷன் கொடுத்தார். அது "இதுதான் என் பதில்" என்று சொல்லும் மாதிரி இருந்தது.

மேலும் , "தேர்தல் குறித்து மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என செய்தியாளர் கேட்டதற்கு, கையெடுத்து கும்பிட்டார். தொடர்ந்து, "தேர்தலில் பரப்புரை செய்வீர்களா?" என்ற கேள்விக்கு 'No Comments' என பதிலளித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News