Dailyhunt
திருச்செந்தூர், ஷீரடியை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயின் அடுத்த ஆன்மீக பயணம்..!

திருச்செந்தூர், ஷீரடியை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயின் அடுத்த ஆன்மீக பயணம்..!

Top Tamil News 1 week ago

வெக தலைவரும் நடிகருமான விஜய் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய் கேற்கொண்டு வரும் ஆன்மீக பயணம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 28ந் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விஜய் வழிபாடு நடத்தினார். பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றி வேலும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுதினமே (ஏப்.29) மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தனி விமானம் மூலம் சென்று தரிசனம் செய்தார். தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் அடுத்த ஆன்மீக பயணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நாளை மே 02 ஆம் தேதி காலை 5 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிராத்தனை மேற்கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளார். பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களை ஒரே பயணத்தில் இணைப்பதன் மூலம் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News