Dailyhunt
திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை

திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை

Top Tamil News 5 days ago

மிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழககம் 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

எந்த தொகுதிகளில் எல்லாம் த.வெ.க வெற்றிபெறும் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். திருச்சி கிழக்கில் விஜய் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை விட சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் முன்னிலையில் உள்ளார். இதேபோல் பெரம்பூரிலும் விஜய் 3,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்றிலேயே அவர் பெரம்பூரில் 6463வாக்குகள் பெற்றிருந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News