Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"திருட்டு நிதிக்கு திரள் நிதி எவ்வளவோ மேலானது"- சீமான்

"திருட்டு நிதிக்கு திரள் நிதி எவ்வளவோ மேலானது"- சீமான்

Top Tamil News 7 hrs ago

என் தம்பியை பாக்க கூடுன கூட்டம் இப்போ வருதா பாருங்க..? எத்தனை நாளைக்கு பார்க்க முடியும்.. ? நீங்க என் முகத்தை பார்க்க வரல..

கருத்தை கேட்க வந்துருக்கீங்க.. என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், "பான் பிராக், சாராயம் தயாரித்து விற்கிறவன் ஏழையாக இருக்கானா?...கார், செல்போன் விற்கிறவன் ஏழையாக இருக்கானா? ஆனால், உலகத்திற்கு சோறுபோடுகிற... உணவை உற்பத்தி செய்கிற விவசாயி மட்டும் ஏன் ஏழையாக இருக்கிறான்... கடனாளியாக இருக்கிறான்?ஏனென்றால், எல்லோரும் அவன்.. அவன் உற்பத்தி செய்கிற பொருட்களுக்கு விலையை அவனே தீர்மானிக்கிறான்; ஆனால், விவசாயி விளைவிக்கும் எந்த பொருளுக்கும் அவன் தீர்மானிக்க முடியாது; வாங்குபவன்தான் தீர்மானிக்கிறான்.

நாங்கள் ஜெயிக்கவே மாட்டோம் என்று நினைக்காதீர்கள்; என்னிடம் அதிகாரம் வரும்போது, "அப்போதே இந்த புள்ளைகிட்ட ஆட்சியை கொடுத்திருக்கலாம்; எப்போவோ நாட்டை சரி செய்திருப்பான்" என்று நினைப்பீர்கள்; அவ்வளவு வருந்துவீர்கள். இந்த 6 மாத காலம் உங்கள் மகனிடம்(சீமான்) ஆட்சி இருந்திருந்தால், என்னவாகிருக்கும்... யாருடா இந்த Chief Minister என்று இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கும். என் தம்பியை பாக்க கூடுன கூட்டம் இப்போ வருதா பாருங்க..? எத்தனை நாளைக்கு பார்க்க முடியும்.. ? நீங்க என் முகத்தை பார்க்க வரல.. கருத்தை கேட்க வந்துருக்கீங்க. நான் வெற்றி பெற்றால் முதலாளிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். திருட்டு நிதிக்கு திரள் நிதி எவ்வளவோ மேலானது.. எங்களின் இலக்கு ஒன்றுதான்.. நான் உண்மையா இருப்பேன். மக்கள் பணத்த தொடமாட்டேன், தொட்டா விடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்; ஆனா கூட சேர்த்துக்கிட்டு கும்மியடிப்பேன் என சொல்கிறார்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News