Dailyhunt
"உங்க விஜய், நா வரேன்!"- சென்னையில் நாளை பிரச்சாரம்

"உங்க விஜய், நா வரேன்!"- சென்னையில் நாளை பிரச்சாரம்

Top Tamil News 3 weeks ago

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜய் நாளை அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் களமிறங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துவிட்டு கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் விஜய்க்கும் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தன் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய விஜய் அதையடுத்து பண்ண வேண்டியிருந்த வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று முதல் நான்கு தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்கிறார். வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம்,T நகர் போன்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News