Dailyhunt
வெயில் காலத்தில் உண்டாகும் வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேர் வைத்தியம்

வெயில் காலத்தில் உண்டாகும் வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேர் வைத்தியம்

Top Tamil News 2 weeks ago

பொதுவாக கோடை காலத்தில் வாட்டியெடுக்கும் வெயிலால் நம் உடலில் பலவிதமான தொல்லைகள் உண்டாகிறது .வியர்வை முதல் பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும் .இந்த கோடை வெயிலை சமாளிக்க உதவும் வெட்டி வேர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.கோடை காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது , தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
2.சிலருக்கு வெயில் காலத்தில் அதிக வியர்வை உண்டாகும் .இந்த வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து , தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.
3.சிலருக்கு தீக்காயம் உண்டாகும் .இந்த தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பூசலாம்.
4.சிலருக்கு கால் எரிச்சல், வலி இருக்கும் ,இதை போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசவேண்டும்.
5.வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, போன்ற நோய்கள் குணமாகும்
6.உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை வெட்டி வேரால் குறையும்.
7.சிலருக்கு காய்ச்சலுக்கு பின்பு உடல் சோர்வு இருக்கும் ,இந்த சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும்.
8.அந்த வெட்டி வேர் நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரித்து ,வயிற்றுப் புண்ணும் குணமாகும்.
9.வெட்டிவேரிலிருந்து ஒருவித நறுமண எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது
10.மேலும் வெட்டி வேர் மருந்துகளிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.
11.மேலும் வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News