Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் இல்லத்தில் போலீசார் குவிப்பு

விஜய் இல்லத்தில் போலீசார் குவிப்பு

Top Tamil News 3 weeks ago

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலிலும் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில், ஆரம்பம் முதலே தவெக முன்னிலையில் உள்ள நிலையில், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் விஜயின் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவுடன் வேட்பாளர்கள் பனையூர் வரவேண்டும் என ஏற்கனவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான இடங்களில் அக்கட்சியினர் முன்னிலையில் இருக்கின்றனர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News