Dailyhunt
விஜய் வேட்புமனுவில் மீண்டும் குளறுபடி- ஒரே நாளில் 6 கோடி எங்கே போனது?

விஜய் வேட்புமனுவில் மீண்டும் குளறுபடி- ஒரே நாளில் 6 கோடி எங்கே போனது?

Top Tamil News 1 week ago

வெக தலைவர் விஜய், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்றே திட்டமிட்டு சொத்து கணக்கை மாற்றி மாற்றி கொடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார். இந்நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், இரு மனுக்களிலும் வயதை வெவ்வேறாக குறிப்பிட்டிருப்பதால் குழப்பம் நிலவுகிறது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 52 என குறிப்பிட்டிருந்த விஜய், 3 நாட்களுக்குப் பின் திருச்சியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 51 என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு மனுவில் தன் மீது வழக்கு ஏதும் இல்லை எனவும், ஒரு மனுவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. பெரம்பூர் வேட்புமனுவில் 410 கோடி சொத்து என்று சொல்லி இருக்கிறார். திருச்சி கிழக்கில் மற்றும் பெரம்பூரில் ஏற்கனவே கொடுத்த மனுவில் 404 கோடி என்று போட்டு இருக்கிறார். இப்போது மறுபடியும் திருச்சி சென்று இரண்டாவது மனு கொடுக்கப்போகிறாரா விஜய் அல்லது அவர்களே நிராகரிக்கட்டும் என்று நினைக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News