Dailyhunt
விஜய்யின் ரூ.6 கோடிக்கு பதில் கிடைத்தது!

விஜய்யின் ரூ.6 கோடிக்கு பதில் கிடைத்தது!

Top Tamil News 1 week ago

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார் விஜய்

ஏப்ரல் 4ஆம் தேதி விஜய் தாக்கல் செய்த கூடுதல் பிரமாண பத்திரத்தில் ரூ.410 கோடி அசையும் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ம் தேதி விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.404 கோடி அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய்யின் பிரசார கேரவன் குறித்த விவரம் புதிய பிரமாண பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிரசார கேரவன், அவர் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளது. பிரசார கேரவன் மதிப்பு ரூ.6 கோடியே 25 ஆயிரம். கேரவனுடன் சேர்த்து விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடி என பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News