Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றும் நாகார்ஜூனா -எதனால் தெரியுமா ?

15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றும் நாகார்ஜூனா -எதனால் தெரியுமா ?

TTN Cinema 1 week ago

மீபத்தில் ஐதராபாத்தில் நடந்த சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, 'நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எப்போதும் கவனமாக இருக்கிறேன்.

15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றுகிறேன். அதுபோல், என் வீட்டிலுள்ள வைஃபை (WiFi) கடவுச்சொல்லை ஒன்று அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். நான் போன் வைத்துள்ளேன். ஆனால், அதை யாராவது ஹேக் செய்துவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் எனக்கு இருக்கும். மேலும், எனது போனில் போட்டோக்களை சேமித்து வைப்பது இல்லை. உண்மையிலேயே எனது போனில் போட்டோ, செல்ஃபி எடுப்பது இல்லை. ஆனால், அப்பாவி முதியவர்களுக்கு சைபர் மோசடியாளர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது எனக்கு தெரியும்.

சுமார் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கி அதிகாரி போல் நடித்த ஒருவர் பங்குகளிலும், ஈக்விட்டிகளிலும் முதலீடு செய்யச் சொல்லி நம்ப வைக்க முயன்றார். எனது உறவினர் ஒருவர் வீட்டிலேயே சுமார் 6 முதல் 7 மணி நேரம் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அனுபவமும் இருக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரி போல் நடித்த நபர், ஈரான் நாட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதில் போதை பொருட்கள் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். நல்ல வாய்ப்பாக, எனது உறவினர் சைபர் கிரைம் துறையை தொடர்புகொண்டு, அந்த மோசடியில் இருந்து தப்பித்தார்' என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TTN Cinema