Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படம் -யார் தயாரிப்பாளர் தெரியுமா ?

துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படம் -யார் தயாரிப்பாளர் தெரியுமா ?

TTN Cinema 4 hrs ago

டிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் ஒரு தயாரிப்பாளர் ஆக தனது வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலமாகவே 'ஹிட்' என்ற படத்தின் மூன்று பாகங்கள் மற்றும் 'கோர்ட்' உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்தவர்.

தற்போது மீண்டும் 'கோர்ட்' படத்தின் இயக்குனர் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் நானி ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நானி, ஸ்டார் நடிகர் போல், மலையாளத்தில் துல்கர் சல்மான் ஸ்டார் நடிகராக இருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதுதான் இருவருக்கும் இருக்கும் பெரும் ஒற்றுமை. இந்நிலையில் எந்தவித ஈகோவும் இல்லாமல் நானியும் துல்கர் சல்மானும் இணைந்து பணியாற்ற இருப்பது வரவேற்கத்தக்கது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TTN Cinema