இயக்குநராக சினிமாவில், அறிமுகமாகி தற்போது சிறப்பான நடிகராக இருந்துவருபவர் சசிகுமார்(Sasikumar). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிவருகிறது.
வெப் சீரிஸ் இயக்கும் சசிகுமார்:
இயக்குநர் சசிகுமார் இறுதியாக 2010ம் ஆண்டில் வெளியான ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதற்கு பின் எந்த படங்களை இவர் இயக்கவில்லை. தொடர்ந்து ஹீரோவாகவே படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் புது படம் ஒன்றை இயக்குவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். ஆனால அது குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. சூர்யா 47 படம் எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் தகவல் தற்போது ஒரு புத்தக கதையை வெப் தொடராக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை என்ற புத்தகத்தை வெப் தொடராக இயக்க சசிகுமார் திட்டமிட்டுள்ளாராம். இதில் அவரே லீட் ஹீரோவாக நடிக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிறது.சசிகுமார் வெப் தொடர் இயக்குவது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
சசிகுமார் தற்போது புதிதாக படம் ஒன்றில் நாயகனாக நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்தபிறகே, இந்த வெப் சீரிஸை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

