Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
7 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்ட EPFO இணையதளம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. முக்கிய தகவல்!

7 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்ட EPFO இணையதளம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. முக்கிய தகவல்!

TV9 Tamil 1 month ago
ழியர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் பிஎஃப் (PF - Provident Fund) பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO - Employee Provident Fund Organization) மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இன்னும் ஒருசில நாட்களில் அந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சம் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ இணையதளத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் சேவையில் இருந்து முடக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் இபிஎஃப்ஓ இணையதளத்தை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர். இந்த நிலையில், எப்போது இபிஎஃப்ஓ இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அது குறித்த முக்கிய தகவலை இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது.

ஜூன் 26 முதல் முடக்கப்பட்ட இபிஎஃப்ஓ இணையதளம் - காரணம் என்ன?

இந்தியாவில் பணியாற்றும் பெரும்பாலான தனியார் துறை ஊழியர்களுக்கு முதன்மை சேமிப்பாக பிஎஃப் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களுக்கு திடீரென நிதி பற்றாக்குறை ஏற்படும்போது பிஎஃப் பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். தற்போதைய நிலவரப்படி பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அது வங்கி கணக்கிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. சமீபத்திய வட்டி விகிதங்கள தெரிஞ்சுக்கோங்க! அதற்கு மூன்று நாட்கள் முதல் 10 நாட்கள் வரை எடுக்கும். இந்த நிலையில் தான், ஊழியர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ 3.0 அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் யுபிஐ, ஏடிஎம் மூலம் ஒருசில நிமிடங்களில் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

ஜூலை 03, 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வரும் இபிஎஃப்ஓ இணையதளம்

இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் என்று அதற்கான பணிகளை இபிஎஃப்ஓ மேற்கொண்டது. அதற்காக ஜூன் 26, 2026 முதல் இபிஎஃப்ஓ இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டது. ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் மட்டுமே இணையதளம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்! பிறகு ஜூலை 02, 2026 அன்று நள்ளிரவு 12 மணி முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறியது. ஆனால், நேற்றும் இணையதளம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் தான், மேலும் ஒரு நாள் அவகாசத்தை இபிஎஃப்ஓ நீட்டித்துள்ளது. அதாவது ஜூலை 03, 2026 அன்று நள்ளிரவு 12 மணி முதல் இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil