Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது!

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது!

TV9 Tamil 5 months ago
நடிகர் அர்ஜுன் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் அர்ஜுன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் தீயவர் குலை நடுங்க.
இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் சீதா பயணம் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடிக்க நடிகர் நிரஞ்சன் சுதீந்திரா நாயகனாக நடித்து இருந்தார். பயணம் தொடர்பான ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிகர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் அர்ஜுன் தற்போது தமிழ் சினிமாவில் ப்ளாஸ்ட் என்ற படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது:

அதன்படி ப்ளாஸ்ட் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புக்கிங் பணியை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... உங்கள் கருணையாலும் பாசத்தாலும் என்னை நெகிழச் செய்ததற்கு நன்றிகள் - ரசிகர்களுக்காக நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட கார்த்தி

ப்ளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil