Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்த பத்திரப்பதிவு துறை!

ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்த பத்திரப்பதிவு துறை!

TV9 Tamil 6 hrs ago
மிழகத்தில் பத்திரப்பதிவை முழுவதுமாக ஆன்லைன் மயமாக்குவதற்கான பணிகள் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இருந்தே நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவை ஆன்லை மயமாக்கியுள்ளது. இந்த பத்திரப்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, டோக்கன் இருந்தால் தான் பத்திரப்பதிவில் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்த நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த டோக்கன் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் பத்திரப்பதிவு முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரிசை முறைக்கான டோக்கன்களை பெற வேண்டிய அவசியம் இல்லை

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வீடு, மனை உள்ளிட்டவற்றை பத்திரப்பவிது செய்யும் பணிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வரிசை முறைக்கான டோக்கன் பெற வேண்டும் என்ற தேவை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனை பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிகளை 5 கட்டங்களாக பிரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!

ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை ஸ்டார் 3.0 மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகள், வீட்டு மனை உள்ளிட்ட பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிய வீட்டு மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி எனப்படும் வீட்டு கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு, அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலே பதிவு செய்ய முடியும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil