ஆப்பிள் பழங்களை நாம் தினமும் சாப்பிட்டு (Benefits of Eating Apples) வருவதன் மூலம் நமது உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
உடலுக்கு நன்மை தரும் ஆப்பிள் பழத்தின் நன்மைகள்
பொதுவாக மனிதர்கள் விரும்பி உண்ணும் பழங்களில் ஆப்பிள் எப்போதும் முன்னணி வகிக்கிறது. இதன் சுவை மட்டுமல்லாமல், இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களும் இதனை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக் காரணமாக அமைகின்றன. குறிப்பாக, இதனைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நம் உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் சாப்பிடும் முறையும் அதன் பயன்களும்
ஆப்பிள் பழங்களை எப்போது உண்பது சிறந்தது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும். பொதுவாக இதனை அதிகாலை வேளையில் சாப்பிடுவது மிகுந்த நன்மைகளை அளிக்கும். ஒருவேளை உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஆப்பிளை வேக வைத்து உட்கொள்வது கூடுதல் பலன்களைத் தரும் என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவோர் உலர் பழங்களுடன் ஆப்பிளையும் சேர்த்து உட்கொள்வது உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.தயிர் மற்றும் அசைவ உணவுகளின் தாக்கம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். தயிரில் பொட்டாசியம், துத்தநாகம் (ஜிங்), மெக்னீசியம் மற்றும் புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஏராமாகக் நிறைந்துள்ளன. அதேசமயம், அசைவ உணவுகளை அதிகளவில் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இறைச்சியில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் அது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும். : இரவில் தூங்குவதற்கு முன் வெந்நீரில் எலுமிச்சை கலந்து குடிக்கலாமா?ஆரோக்கியமான உணவு முறை மாற்றங்கள்
நம் உடலின் எடையைக் குறைப்பதற்கும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற பழங்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான பழங்கள் மற்றும் சரியான உணவுப் பழக்கவழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் நாம் பல வகையான நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
