தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வருபவர் நட்டி சுப்ரமணியம். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் படங்களில் நடித்து வந்த நடிகர் நட்டி சுப்ரமணியம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான நாளை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.
கருப்பு படம் குறித்து வெளிப்படையாக பேசிய நட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கருப்பு படம் குறித்து நட்டி சுப்ரமணியம் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி வருகிறார். இந்தப் படம் நிச்சயமாக நடிகர் சூர்யாவின் படங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படம் வெளியாகும் போது எப்படி இருக்கிறது என்பதும் உங்களுக்கே புரியவரும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். ... இட்லி கடை படத்தின் கதை அந்த பிரபலத்தின் பயோ பிக்கா? இணையத்தில் வைரலாகும் செய்திஇணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

